பயன்பாட்டுக்கு வராத ‘பலே’ பாக்டீரியாக்கள்! - உதவிக்கு வரும் உயிரியல் - 13

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சின்னச் சின்ன நுண்ணுயிர்கள் பெரிய பெரிய லாபம்! இடுபொருள்முனைவர் அ.உதயகுமார் - தொகுப்பு: ரா.கு.கனல்அரசு

யற்கை தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் என்பது நாம் அறிந்ததுதான். அப்படித் தகவமைத்துக்கொள்வதில் நுண்ணுயிர்களின் பங்கு முக்கியமானது. இந்த நுண்ணுயிர்கள் விவசாயத்தில் மிகப்பெரும் பங்காற்றுகின்றன. இவற்றைப் பற்றிய விழிப்பு உணர்வு நம்மிடம் போதுமான அளவு இல்லை. ஆனால், வெளிநாடுகளில் பயிர்வளர்ச்சி, நோய்க் கட்டுப்பாடு போன்றவற்றுக்கு வகை வகையான பாக்டீரியாக்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். இவற்றைப் பயன்படுத்துவது மூலமாக, மண்ணில் இடும் அத்தனை சத்துகளும் சிந்தாமல் சிதறாமல் பயிர்களுக்குக் கிடைக்கிறது. ஆனால், நாம் இடும் இடுபொருள்களில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படாமலே வீணாகின்றன. இயற்கையாகவே மண்ணில் பல நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் இருக்கின்றன. ஆனால், ரசாயன உரங்களைக் கொட்டி அவற்றை அழித்தொழித்துக் கொண்டிருக்கிறோம். மண்ணிலுள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் பற்றி இதுவரை பார்த்தோம். அவையனைத்தும் பயன்பாட்டில் இருப்பவை. ஆய்வுக்கூடங்களில், பலன் கொடுக்கும் எனக் கண்டுபிடித்து, இன்னமும் பயன்பாட்டுக்கு வராத பல நுண்ணுயிர்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.     

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick