காக்க காக்க... பனை காக்க! - பலன் தரும் பனைமரங்கள்

இயற்கைஇ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன் - ஏ.சிதம்பரம்

‘உச்சி சலசலக்கும், உடல் நீண்டு இருக்கும், நிறம் கறுத்து இருக்கும், நின்னு பார்த்தால் கழுத்து வலிக்கும் - அது என்ன?’ என்று கரிசல் காட்டுக் கிராமங்களில் ஒரு அழிப்பான் கதை போடுவார்கள். அதற்குப் பதில் ‘பனைமரம்’. அந்தளவுக்குத் தமிழர் வாழும் கிராமங்களில் மண்ணோடு, மனதோடு கலந்தது இந்த மரம். இம்மரத்தின் வேரிலிருந்து இலை வரை அனைத்துமே பலன் தருபவை. அதனால்தான் இம்மரத்தை ‘பூலோகத்தின் கற்பகத்தரு’ என்கிறார்கள். இத்தகைய சிறப்புமிக்க பனைமரங்கள் சில ஆண்டுகளாக மிக வேகமாக அழிக்கப்பட்டு வருவதுதான் வேதனையான விஷயம்.  பனை குறித்துத் தூத்துக்குடி நகரைச் சேர்ந்த நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் ஆ.சிவசுப்பிரமணியன், பல ஆண்டுகள் ஆய்வு செய்து ‘பனை மரமே பனை மரமே’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அவரிடம் பனையின் சிறப்புகள் குறித்துப் பேசியபோது பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். அவை இங்கே...   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick