தண்டோரா

அறிவிப்புபசுமைக் குழு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

இயற்கை சான்றிதழ் பயிற்சி

கரூர் மாவட்டம், கடவூர் தாலூகா, சேவாப்பூர், இன்பசேவா சங்கம் நடத்தும் ‘இயற்கை உயிராற்றல் வேளாண்மைச் சான்றிதழ் பயிற்சி’ அக்டோபர் 2-ம் தேதி முதல் துவங்க உள்ளது. இப்பயிற்சியில் இடுபொருள் தயாரிப்பு, கால்நடைப் பராமரிப்பு, நீர் மேலாண்மை, விதை உற்பத்தி உள்ளிட்ட பல பயிற்சிகள் வழங்கப்படும். 25 வயதிற்குட்பட்ட 12-ம் வகுப்பு தேர்ச்சியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக் கட்டணம் இலவசம்.

தொடர்புக்கு, செல்போன்: 96597 17708.

கால்நடை மூலிகை வைத்தியம்


மதுரை, தமுக்கம் மைதானத்தில் சேவா மற்றும் தானம் அறக்கட்டளை இணைந்து செப்டம்பர் 23-ம் தேதி ‘கால்நடை மூலிகை வைத்தியம் மற்றும் பாரம்பர்ய கால்நடை இனங்களைப் பாதுகாத்தல்’, 23-ம் தேதி ‘இயற்கை வேளாண்மை மற்றும் விவசாயிகளின் கண்டுபிடிப்புகள்’ ஆகிய பயிற்சிகளை நடத்த உள்ளன.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2380082, செல்போன்: 95979 60409

நாட்டுக்கோழி

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 26-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது.

தொடர்புக்கு, தொலைபேசி: 04563 220244.

நாட்டுமாடு வளர்ப்பு


சேலம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 13-ம் தேதி ‘நாட்டுமாடு வளர்ப்பு’, 19-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408. 

கூட்டுமீன் வளர்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 14, 15-ம் தேதிகளில் ‘நிலக்கடலையில் பூச்சி மேலாண்மை’, 20, 21-ம் தேதிகளில் ‘ஊறுகாய் தயாரித்தல்’, 20, 21-ம் தேதிகளில் ‘கூட்டு மீன் வளர்ப்பு’, 26, 27-ம் தேதிகளில் ‘தென்னைச் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

கொடுவா மீன் உற்பத்தி

நாமக்கல், வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 18-ம் தேதி ‘கொடுவா மீன் உற்பத்தி மற்றும் இனப்பெருக்கம்’, 19-ம் தேதி ‘விதை உரக்கட்டுப்பாடு தொழில்நுட்பம் மூலம் எளிய பயிர்கள் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.
 
தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345. 

மாடித்தோட்டம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் செப்டம்பர் 14-ம் தேதி ‘இயற்கை விவசாயம்’, 19-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 20, 21-ம் தேதிகளில் ‘ஒருங்கிணைந்த முறையில் கால்நடைப் பண்ணைகள் அமைத்தல்’, 26-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 99448 09246.

தீவனம் தயாரிப்பு!

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் செப்டம்பர் 19-ம் தேதி ‘கறவை மாடுகளில் இனவிருத்தித் திறனை அதிகரிக்கும் அடர் தீவனத் தயாரிப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,  தொலைபேசி: 04142 290249.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick