மரத்தடி மாநாடு: உச்சத்தில் சோளம்... சரிவில் மக்காச்சோளம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

திகாலையிலேயே தோட்டத்துக்கு வந்துவிட்ட ‘ஏரோட்டி’ ஏகாம்பரம், பக்கத்துத் தோட்டத்தில் ஆழ்துளைக்கிணறு அமைத்துக் கொண்டிருந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமியும், ‘காய்கறி’ கண்ணம்மாவும் தோட்டத்துக்கு வந்ததைப் பார்த்துவிட்ட ஏரோட்டி வேகமாக நடந்துவந்தார்.

“நேத்து ராத்திரில இருந்து போர் வண்டி ஓடிட்டு இருக்கு. எழுநூறு அடிக்கு மேல போட்டாச்சு. இப்போதான் ஈரம் தென்படுது. இதுக்கிடையில ரெண்டு தடவை ஏதோ கோளாறாகி வண்டி நின்னுபோச்சாம். அதைச் சரி பண்ணி ஓட்டிக்கிட்டு இருக்காங்களாம். ஈர மண்ணு தென்படவும்தான் தோட்டத்துக்காரருக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்துருக்கு” என்றார் ஏரோட்டி.

“பாவம் பயிரைக் காப்பாத்த எப்படியெல்லாம் பாடுபட வேண்டியிருக்கு” என்று வருத்தப்பட்ட காய்கறி, கூடையில் இருந்து ஆளுக்கு இரண்டு சோள தோசைகளையும் பருப்புத் துவையலையும் எடுத்துக் கொடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்