முருங்கை... முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்!

தொழில்நுட்பம்ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார், ரமேஷ் கந்தசாமி

றட்சியைத் தாங்கும் திறன்கொண்ட முருங்கை, தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வளரக்கூடியது. மேலும் சத்தான சந்தை வாய்ப்பும் இருப்பதால், விவசாயிகளின் தோழனாகவே இருக்கிறது முருங்கைச் சாகுபடி. பாசன வசதியைப் பொறுத்துச் செடி முருங்கை, மர முருங்கை என ரகங்கள் இருந்தாலும், இரண்டுக்குமே சாகுபடி நுட்பங்கள் ஒன்றுதான்.

முருங்கைச் சாகுபடித் தொழில்நுட்பங்கள் பற்றிக் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன் சொல்லிய விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

“முருங்கையின் தாயகம் இந்தியா. இது 10 மீட்டர் முதல் 12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து 1,500 மீட்டர் முதல் 2,000 மீட்டர் உயரம் வரை உள்ள பகுதிகளில்கூட வளரும். இந்தியா, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகளவில் பயிரிடப்படுகிறது. முருங்கையில் காய், விதை, இலை ஆகியவைதான் பயன்படுத்தப்படுகின்றன. முருங்கையில் பல ரகங்கள் இருந்தாலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள பி.கே.எம்-1, பி.கே.எம்-2, கே.கே.எம்-1 ஆகிய மூன்று ரகங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick