வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்! | Organic fertilizer for Just Rs 20 - Pasumai Vikatan | பசுமை விகடன்

வேஸ்ட் டீகம்போஸர்... - 20 ரூபாயில் வாழ்நாள் முழுவதும் இயற்கை உரம்!

இடுபொருள்த.ஜெயகுமார் - படங்கள்: க.மணிவண்ணன், சி.ரவிக்குமார்

தாவரக்கழிவுகளை எளிதில் மட்க வைக்கப் பயன்படும் வகையிலும் மண்ணில் நுண்ணுயிர்களைப் பெருக்கும் இடுபொருளாகப் பயன்படுத்தும் வகையிலும் ‘வேஸ்ட் டீகம்போஸர்’ (Waste Decomposer) எனும் இடுபொருளைக் கண்டுபிடித்து வெளியிட்டு இருக்கிறது, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலவாழ்வு அமைச்சகத்தின் கீழ், உத்தரப்பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் இயங்கி வரும் ‘தேசிய இயற்கை விவசாய மையம்’. தென்னிந்திய விவசாயிகளிடம் இதைப் பரவலாக்கும் பணிகளைச் செய்து வருகிறது, பெங்களூருவில் உள்ள ‘மண்டல இயற்கை விவசாய மையம்’.

வேஸ்ட் டீகம்போஸர் குறித்துப் பெங்களூரு மையத்தின் துணை இயக்குநர் ரவீந்தரநாத்திடம் பேசினோம். “இந்தியாவில் ஆண்டுதோறும் 62 மில்லியன் டன் இயற்கைக் கழிவுகள் உருவாகின்றன. இந்தியாவின் நகரங்களில் வசிக்கும் ஒரு மனிதன், ஒரு நாளைக்கு 200 கிராமிலிருந்து 600 கிராம் வரை மட்கக்கூடிய கழிவுகளை உருவாக்குகிறார். 300-400 வீடுகள் கொண்ட ஒரு கிராமத்தில் ஒரு நாளைக்கு 2 டன் அளவுக்கு வேளாண் கழிவுகள் (மாட்டுச் சாணம், தீவனக்கழிவுகள், தோட்ட கழிவுகள்) உருவாக்கப்படுகிறது. இதேபோல, கோசாலைகள், சர்க்கரை ஆலைகள்... போன்றவற்றின் மூலம் பெருமளவில் மட்கக்கூடிய கழிவுகள் உருவாகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick