இனி, நாட்டு மாட்டுப் பாலை எளிதாக அறியலாம்..! | Native cow milk can be Known easily - Pasumai Vikatan | பசுமை விகடன்

இனி, நாட்டு மாட்டுப் பாலை எளிதாக அறியலாம்..!

கண்டுபிடிப்புதுரை.நாகராஜன் - படங்கள்: வெ.நரேஷ் குமார்

விவசாயம் பொய்த்துப் போகும் சமயங்களிலெல்லாம் விவசாயிகளுக்குக் கைகொடுப்பவை கால்நடைகள்தான். அந்தளவுக்கு உற்ற துணையாக இருக்கும் கால்நடைகள் வளர்ப்பில் உபயோகப்படும்படியான பல நவீன உபகரணங்களைக் கண்டுபிடித்து வருகிறது சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம். இதுவரை கால்நடை வளர்ப்பு சம்பந்தமான 24 கருவிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த ஆண்டும் முக்கியமான இரண்டு பொருள்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது பல்கலைக்கழகம்.

ஏ1 (A1) மற்றும் ஏ2 (A2) ஆகிய பால் வகையினங்களைக் கண்டிபிடிக்கும் சோதனைக்கான அட்டை மற்றும் மாடுகளில் சினைப் பிடிக்காமையைச் சரிசெய்யும் வில்லை ஆகியவைதான் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இரண்டு பொருள்கள். இதுகுறித்து நம்மிடம் விளக்கமாகப் பேசினார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குநரகத்தின் பேராசிரியர் முனைவர் குமாரவேல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick