நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு! | India first natural agricultural Island - Pasumai Vikatan | பசுமை விகடன்

நீல் தீவு... - இந்தியாவின் முதல் இயற்கை விவசாயத் தீவு!

பக்கத்து வயல்ஆர்.குமரேசன்

ந்தமான்... சுற்றுலாப் பிரியர்களின் சொர்க்கலோகம். கடல் காதலர்களின் கனவுப் பிரதேசம். இயற்கைப்பிரியர்களின் இஷ்டபூமி. இப்படிப் பேரெழில் காட்டி நிற்கும் அந்தமான் தீவுகளில் தற்போது இயற்கை விவசாயமும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது. ஆழிப்பேரலையால் வீணாகிப்போன நிலங்களையெல்லாம் மீட்டு, விவசாய நிலங்களாக, குறிப்பாக இயற்கை விவசாய நிலங்களாக மாற்றும் முயற்சியில் அந்தமான் நிர்வாகமும், மத்திய வேளாண்மை ஆராய்ச்சி மையமும் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நீல் தீவு என்ற ஒரு தீவுப்பகுதியை முழுமையாக இயற்கை விவசாயத்தீவாக அறிவித்திருக்கிறது அந்தமான் நிர்வாகம். இந்தியாவின் முழுமையான இயற்கை விவசாய மாநிலமாகச் சிக்கிம் திகழ்வதைப்போல, இந்தியாவின் முழுமையான இயற்கை விவசாயத் தீவாக மாறியிருக்கிறது நீல் தீவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick