பசுமை விகடன் வாங்கிக்கொடுத்த ‘அவள்’ விருது!

விருதுதுரை.நாகராஜன் - படங்கள்: விகடன் குழு

விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் ‘அவள் விகடன்’ இதழ் சார்பாகக் கடந்த மார்ச் 14-ம் தேதி, சாதனைப் பெண்களுக்கான விருது வழங்கும் விழா, சென்னையில் நடைபெற்றது. அதில் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அவர்களில் விவசாயத் துறையில் சிறந்து விளங்கும் ‘பசுமைப் பெண்’ விருது, திண்டுக்கல் மாவட்டம், தவசிமடை கிராமத்தைச் சேர்ந்த வாசுகி மருதமுத்து என்பவருக்கு வழங்கப்பட்டது.

சென்னையில் மென்பொருள் பொறியாளர் வேலையில் இருந்த வாசுகியின் கணவர் மருதமுத்து, ‘விவசாயம் செய்யப்போகிறேன்’ என்று சொன்னவுடன் மறுப்பு சொல்லாமல் பச்சைக்கொடி காட்டியதோடு, தானும் விவசாயத்தில் இறங்கி வேலை செய்து வருகிறார்.

விருது வழங்கும் விழா அரங்கில் ‘விவசாயத்தில் சாதிக்கும் பெண்ணுக்கான விருது’ என்று அறிவித்த உடனேயே கைதட்டல்கள் பறந்தன. கணவரோடு வந்திருந்தாலும் தனியாகவே மேடையேறி... நடிகை ரோகிணி, தினமலர் நாளிதழ் இயக்குநர் கோபால்ஜி, நீர்நிலைகள் ஆராய்ச்சியாளர் ஜெயஸ்ரீ  ஆகியோர் கைகளில் விருதை வாங்கினார் வாசுகி மருதமுத்து.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick