நம்பிக்கை கொடுத்த கிச்சிலிச் சம்பா...

மகசூல்இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

யற்கை மீதான அக்கறை அதிகரித்து வருவதால், இளைய தலைமுறையினர் பலரும் இயற்கை விவசாயம் நோக்கி வருகிறார்கள். அதே நேரத்தில், ஆண்டுக்கணக்கில் ரசாயன உரங்களைக் கொட்டிப் பழகிய முந்தைய தலைமுறை விவசாயிகளில் பெரும்பாலானோர், இயற்கை முறைக்கு மாறத் தயக்கம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் இயற்கை விவசாயம் குறித்துத் தன் தந்தையிடம் எடுத்துச் சொல்லி பெரும் முயற்சிக்குப் பிறகு, அவரை இயற்கை விவசாயத்துக்கு மாற்றியிருக்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்.

திருநெல்வேலி, பானான்குளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கீழக்காடுவெட்டி கிராமத்தில் சதீஷ்குமாரின் நெல்வயல் இருக்கிறது. சாலை ஓரமாக இருந்த வயலில், காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன கிச்சிலிச்சம்பா நெற்பயிர்கள். தன் தந்தை சுப்பிரமணியனோடு வயலில் வேலை செய்து கொண்டிருந்த சதீஷ்குமாரைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick