மண், மக்கள், மகசூல்! - இயற்கை உருவாக்கும் பொக்கிஷம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர். - 5மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.நாகமணி

‘மண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன் மூலமே, மனித குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச் சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது!

கடந்த இதழில் நூற்புழுக்கள் (Nematodes) மண்புழுக்கள் அல்ல என்றும், அவற்றுக்கும் மண்புழுக்களுக்குமிடையிலான வேறுபாடுகள் குறித்தும் எழுதியிருந்தேன். அதைப் படித்த வாசகர் ஒருவர், வாட்ஸ்அப்பில் புழுக்கள் படமொன்றை அனுப்பி, ‘இவை மண்ணின் நலத்துக்கு உதவுமா’ என்று கேட்டிருந்தார்.

அவர் அனுப்பியிருந்தது ஈக்களின் முட்டையிலிருந்து உருவாகக்கூடிய முட்டைப் புழுக்களின் (Maggots) படத்தை. அதாவது ஈயின் முட்டையில்  இருந்து லார்வா உருவாகி, பிறகு உருமாறி, இறுதியாகவே ஈ உருவாகிறது. இதுபோலத்தான் பட்டாம்பூச்சி உள்பட பெரும்பாலான பூச்சிகள் பிறக்கின்றன. ஈ போன்ற சில பூச்சிகளின் முட்டையிலிருந்து உருவாகும் புழுக்களை முட்டைப்புழுக்கள் (Maggot) என்றும், பட்டாம்பூச்சி போன்றவற்றின் முட்டையில் இருந்து உருவாகும் புழுக்களைக் கம்பளிப்புழுக்கள் (Caterpillar) என்றும் அழைப்பார்கள். எனவே அந்த வாசகர் அனுப்பியிருந்த புழுக்களின் படத்துக்கும் மண்புழுக்களுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்