பூ மொட்டுப்புழு... கவனம்! - முத்தான மகசூலுக்குச் சத்தான தொழில்நுட்பங்கள்!

தொழில்நுட்பம்ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

சென்ற இதழ் தொடர்ச்சி...

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரன், முருங்கைச் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்துச் சொன்ன தகவல்கள் கடந்த இதழில் இடம்பிடித்திருந்தன. தொடர்ந்து பூச்சி மற்றும் நோய் மேலாண்மை பற்றிச் செந்தூர்குமரன் சொன்ன தகவல்கள் இங்கே...

“பூ மொட்டுப்புழு, பூ மொட்டுத் துளைப்பான், இலைவெட்டுப்புழு, கம்பளிப் புழு, பட்டை மற்றும் தண்டுத் துளைப்பான், சாம்பல் வண்டு ஆகியவை முருங்கையைத் தாக்கும் பூச்சிகள். பூ மொட்டுப் புழுவைச் சரியாகக் கவனிக்கத் தவறினால் 78 சதவிகித அளவு சேதாரம் ஏற்படும். இது அந்துப்பூச்சியின் தாக்குதலாகும். அந்துப்பூச்சி பூ மொட்டில் முட்டையிடக்கூடியது. ஒரு பெண் அந்துப்பூச்சி, தன் வாழ்நாளில் 250 முட்டைகள் வரை இடும். அதிலிருந்து வெளிவரும் புழு லேசான பழுப்பு நிறத்தில் இருக்கும். முட்டை வைத்ததிலிருந்து நான்கு நாள்களில் புழுக்கள் வெளிவந்து, பூவுக்குள் போய்விடும். ஒரு பூவில் ஒரு முட்டை முதல் ஐந்து முட்டைகள் வரைகூட இருக்கலாம். எத்தனை முட்டை இருந்தாலும், ஒரு புழு பூவுக்குள் போய்விட்டால், அந்தப் பூ அவ்வளவுதான். மொட்டு உருவானவுடன் 5 சதவிகித மூலிகைப் பூச்சிவிரட்டிக் கரைசலைத் தெளித்து, இந்தப் புழுக்களின் தாக்குதலைத் தவிர்க்கலாம். காலை நேரத்தில் பனி விலகியவுடன் மூலிகைப் பூச்சிவிரட்டியைத் தெளிக்க வேண்டும். நிலத்தில் ஆங்காங்கே விளக்குப்பொறி வைத்தும் கட்டுப்படுத்தலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick