நீங்கள் கேட்டவை: ‘‘இளம் பசுங்கன்றுகள் எங்கு கிடைக்கும்?’’

புறாபாண்டி

‘‘எங்கள் வயலில் உள்ள நெற்பயிர் நூற்புழுத் தாக்குதலால் வெளிர் நிறத்துடன், வளர்ச்சிக் குன்றி உள்ளது. இதை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?’’

கே.நாகபூஷணம், திருவள்ளூர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் நூற்புழுவியல் துறையின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ச.சுப்ரமணியன் பதில் சொல்கிறார்.

‘‘நெல் வேர் நூற்புழு, நெல் வெண்நுனி இலை நூற்புழு, நெல் வேர் முடிச்சு நூற்புழு என மூன்று வகையான நூற்புழுக்கள் நெற்பயிர்களைத் தாக்குகின்றன. நெல் வேர் நூற்புழு தாக்குதல், ஏறத்தாழத் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்றன. இந்நூற்புழுக்களின் பாதிப்பினால் சுமார் 10-12 சதவிகிதம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. பொதுவாக மண்ணில் காணப்படும் இந்நூற்புழுக்கள் ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்கு நாற்றுகளின் வேர், பாசனத்தின்போது பாய்ச்சப்படும் நீர், வயல் வேலைகளின்போது பயன்படுத்தப்படும் ஏர், டிராக்டர் மற்றும் வயலில் வேலை செய்யும் வேலையாள்கள் மூலம் பரவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick