தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 12 - தடைகளைத் தாண்டுமா தாமிரபரணி?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தண்ணீர்‘பொறிஞர்’ அ.வீரப்பன் - தொகுப்பு: த.ஜெயகுமார் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

ண்டை மாநிலங்களில் தோன்றி தமிழ்நாட்டில் பாயும் ஆறுகள் பாலாறு, தென்பெண்ணை, காவிரி முதலியன. தமிழ்நாட்டில் தோன்றி கேரளா மாநிலத்தின் வழியாக மேற்கே அரபிக்கடலில் சேரும் ஆறுகள்... பெரியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, பாண்டியாறு ஆகியவை. தமிழ்நாட்டில் தோன்றி தமிழ்நாட்டிலேயே ஓடி தமிழ்நாட்டு எல்லைப் பகுதிக்குள் கடலில் கலப்பவை வைகை, தாமிரபரணி என ஒரு சில ஆறுகள் மட்டுமே. இவற்றில் தாமிரபரணி ஆற்றைப் பற்றி இந்த இதழில் பார்ப்போம்.

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக இருந்த பகுதி, ஆசிர்வதிக்கப்பட்ட பகுதி. இப்பகுதிக்கு... தாமிரபரணி, வைப்பாறு, நம்பியாறு, அனுமன் நதி என்ற ஆறுகளும் சேர்வலாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, ராமாநதி, சித்தாறு, உப்போடை ஆகிய சிற்றாறுகளும் வளம் கொடுத்து வருகின்றன. இவற்றில் அதிக அளவில் பாசனத்துக்குக் கைகொடுப்பது, தாமிரபரணிதான். பல சிற்றாறுகளின் தண்ணீர் கலந்து ஓடுவதால், இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது, தாமிரபரணி. இந்தியாவில் உள்ள சிறந்த நதிகளில் தாமிரபரணியும் ஒன்று. மேற்குத்தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் தொடங்கி வங்கக்கடலில் வாசம் செய்கிறது இந்த ஆறு. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick