மண், மக்கள், மகசூல்! - எளிதாக மண்புழு உரத்தை உற்பத்தி செய்யலாம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
நிஜத்தைத் தேடி களத்தில்... ஒரு நேரடி ஆய்வுத் தொடர். - 12மண் நலம்முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில் - தொகுப்பு: க.சரவணன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி, வீ.நாகமணி

ண்புழுக்கள் மூலம் உருவாகும் மண்புழு உரம் (Vermi Compost), மண்புழு நீர் (Vermi Wash) ஆகிய இயற்கை எருக்கள் மண் நலத்திலும், இயற்கை வேளாண்மையிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. ‘எரு (உரம்) தயாரித்தல்’ என்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடம் வழக்கத்தில் உள்ள விஷயம்தான். எரு தயாரிப்பதிலேயே பல முறைகள் உள்ளன. மாடு வைத்திருந்த நம் முன்னோர், சாணத்தைச் சேகரித்து ஓரிடத்தில் குவித்து வைப்பார்கள். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அந்தக் குவியலைக் கொண்டு போய் வயலில் எருவாக இடுவார்கள். இன்று சாணத்தின் மூலம் உருவாக்கப்படும் எரு குறைந்துவிட்டதாலோ என்னவோ... மட்கும் பொருள்கள் அனைத்தையும் எருவாக்க முயல்கிறோம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick