பசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு! - 13 - மாடு வாங்க-விற்க... உதவி செய்யும் செயலி!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செயலிகள்மு.ராஜேஷ்

ற்போது உள்ளங்கையிலேயே அனைத்தும் கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன ஸ்மார்ட் போன்கள். ஸ்மார்ட் போனில் இயங்கும் வகையில் விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய பல செயலிகளும் சந்தையில் உள்ளன. அவற்றில் இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வானிலை, வேளாண் காடுகள், சுற்றுச்சூழல் தொடர்பான தகவல்களை அளிக்கக்கூடிய செயலிகள் குறித்துப் பார்ப்போம்.

நெல் வல்லுநர் (Rice Xpert) 

நெல் பயிர் தொடர்பான தகவல்களை இச்செயலி ஆங்கிலத்தில் தருகிறது. தேசிய நெல் ஆராய்ச்சி நிறுவனம், இச்செயலியை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு நிலத்துக்கும் தகுந்தவாறு நெல் வகைகள் பிரித்துத் தரப்பட்டுள்ளன. நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள், அவற்றைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் போன்றவை பட விளக்கங்களுடன் தரப்பட்டுள்ளன. நெல் பயிரைத் தாக்கும் நோய்கள், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள், ஊட்டச்சத்துக் குறைவால் தோன்றும் பிரச்னைகள் போன்றவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன. நாற்று நடவு தொடங்கி, அறுவடை வரையில் பயன்படுத்தப்படும் தகவல்களுக்கான பகுதியும் தனியே இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!