தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 13 - குமரியின் பழையாறு... மீள்வது எவ்வாறு?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தண்ணீர்‘பொறிஞர்’ அ.வீரப்பன், தொகுப்பு: த.ஜெயகுமார், படங்கள்: ரா.ராம்குமார்

மிழக நீர் வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றியும் பேச இருக்கிறது, இத்தொடர். நீர்வளங்களைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் தூண்டுகோலாக இந்தப் பகுதி அமையும்.

காவிரி, வைகை, தாமிரபரணி என்று பெயர் சொல்லிக்கொள்கிற அளவுக்குப் பெரிய ஆறுகள் எதுவுமில்லாத மாவட்டம் என்றால், அது கன்னியாகுமரிதான். இம்மாவட்டத்தில் ஓடும் ஆறுகள் அனைத்தும் சிறியவை. ஆனால், அவற்றின் பாசன அமைப்பு நம்மை வியக்க வைக்கிறது. அதனால்தான் நெல், வாழை, மலர்கள், மரப்பயிர்கள் என்று இன்றும் விவசாயம் செழித்துக் கொண்டிருக்கிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு வகை நிலங்களும் ஒருங்கே கொண்ட மாவட்டமாகத் திகழ்கிறது, கன்னியாகுமரி. இந்த மாவட்டத்தில் ஆறுகள் பெரியளவில் இல்லாமல் போனதற்குக் காரணம், அதன் நிலவியல் அமைப்புதான். இருப்பினும் மாவட்டம் முழுவதும் இருக்கும் சிற்றாறுகள், கால்வாய்கள் தண்ணீரை பல பகுதிகளுக்குக் கொண்டு சேர்த்துப் பாசனத்துக்கும் குடிநீருக்கும் உதவி வருகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்