மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம் | Marathadi manadu - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (10/08/2018)

மரத்தடி மாநாடு: அதிகத் தானியம்... அதிகத் தட்டை! - ஆடிப்பட்டத்துக்கேற்ற கோ(எஸ்)-30 சோளம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

ஓவியம்: வேல்

நிலக்கடலையை அறுவடை செய்றதுக்கு ஆள்களை வரச்சொல்லியிருந்தார் ‘ஏரோட்டி’ ஏகாம்பரம். அதிகாலையிலேயே தோட்டத்துக்குக் கிளம்பிய ஏரோட்டியுடனேயே வந்துவிட்ட ‘வாத்தியார்’ வெள்ளைச்சாமி, நாளிதழ்களைப் படித்துக் கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் வந்த ‘காய்கறி’ கண்ணம்மா அவர்களுடன் இணைந்துகொண்டார்.

ஆடிமாத கூழைக் கொண்டு வந்திருந்த காய்கறி, இருவருக்கும் ஊற்றிக்கொடுத்துவிட்டுத் தானும் குடிக்க ஆரம்பித்தார். அதைப் பருகிக்கொண்டே ஒரு செய்தியைச் சொல்லி அன்றைய மாநாட்டைத் துவக்கி வைத்தார், வாத்தியார்.

“நிலக்கடலையை அறுவடை செஞ்சவுடன் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்துல இருக்குற உலர்களங்கள்ல காய வெச்சுக்கலாமாம். அதுக்கு வாடகை கிடையாது. அதில்லாம ஆறு மாசம் வரை அங்க இருப்பும் வெச்சுகலாமாம். மார்க்கெட்ல விலை ஏறுற சமயத்துல நிலக்கடலையை விற்பனை செஞ்சுக்கலாம். தேவைப்பட்டா, இருப்பு வெச்சுருக்குற நிலக்கடலையோட அளவுக்குப் பொருளீட்டுக்கடனும் வாங்கிக்கலாமாம்னு ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்கள் விவசாயிகளுக்கு அழைப்புவிட்டுருக்கு. அறுவடை செஞ்சதும் வித்துப்புடாம, யோசனை பண்ணிச் செய்” என்று சொன்னார், வாத்தியார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

.

[X] Close