நெல்லுக்கான ஆதார விலை... நாடகமாடும் மத்திய அரசு!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன், படங்கள்: ம.அரவிந்த்

‘விவசாய விளைபொருள்களுக்கு 2018-19-ம் ஆண்டுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையைத் தீர்மானிக்க... டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் கோட்பாடு பின்பற்றப்பட்டுள்ளது’ எனக் கடந்த ஜூலை மாதம் அறிவித்துள்ளது, மத்திய அரசு. இந்த அறிவிப்பு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

‘உற்பத்திச் செலவுடன் கூடுதலாக 50 சதவிகிதம் லாபம் நிர்ணயம் செய்து, நெல் உள்ளிட்ட விளைபொருள்களுக்கு விலை வழங்க வேண்டும்’ என 2004-ம் ஆண்டு, எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை செய்தது. ஆனால், இந்தப் பரிந்துரையை எந்த அரசும் நடைமுறைப்படுத்தவில்லை. அதனால், ‘விளைபொருள்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைபடி விலை நிர்ணயம் செய்ய வேண்டும்’ எனத் தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் உள்ள விவசாயச் சங்கங்கள் கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றன. இதை நடைமுறைப்படுத்தினால்தான் தங்களுக்கு ஓரளவுக்காவது லாபம் கிடைக்கும் என்பது விவசாயிகளின் எண்ணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!