விவசாயத்தில் சாதிக்கும் தமிழர்கள்!

நாட்டு நடப்புஆறுச்சாமி

ண்மையில் நபார்டு வங்கியின் 37-வது நிறுவன நாள் விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன், ‘‘நபார்டு வங்கி நடத்தும், இந்த நிகழ்ச்சிக்குத் தமிழ்மொழி மற்றும் கலாசார அமைச்சரான என்னை அழைத்தமைக்கு முக்கியக் காரணம் உள்ளது.

தமிழ்நாட்டில் விவசாயம் என்பது தொழில் மட்டுமல்ல; அது கலாசாரமாகவும் உள்ளது. அடிப்படையில் தமிழர்கள் விவசாயத்தில் புதிய யுக்திகளைப் பின்பற்றுவதில் முன்னோடியாக உள்ளனர். வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், அதற்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளலாம். மலேசியா காடுகளைச் சீர்த்திருத்தி ரப்பர் தோட்டங்களை உருவாக்க தமிழ்நாட்டிலிருந்து தான் விவசாயிகள் சென்றனர். மொரீசியஸ் நாட்டில் கரும்புத் தோட்டம் அமைக்க, தமிழர்களைத்தான் அழைத்துச் சென்றார்கள். இலங்கையில் தேயிலைத் தோட்டத்தை உருவாக்க, உழைத்துச் சலிக்காத தமிழ்நாட்டு உழவர்கள்தான் சென்றார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்