கடுதாசி | Readers Feedback letters - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/11/2018)

கடுதாசி

ங்கள் ஊரில் சீத்தா பழ மரங்கள் வேலியில் வளர்ந்து நிற்கும். காய்க்கும்போது மட்டுமே, சீத்தா மரத்தின் பக்கம் செல்வோம். மற்ற மரங்களைப்போல, சீத்தா மரத்தையும் தனிப்பயிராக வளர்க்க முடியும் என்ற தகவல் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

- எம்.சி.கணேஷ், பொன்னேரி.

புதுச்சேரி மாநிலத்துக்கு விவசாயம் செய்பவரே விவசாய துறை அமைச்சராக இருக்கிறார். அமைச்சர் கமலக்கண்ணனின் விவசாய ஈடுபாடு தொடரட்டும். புதுச்சேரி பக்கம் போனால், அமைச்சருக்கு வாழ்த்துச் சொல்ல திட்டமிட்டுள்ளோம்.

- கே.தங்கராசு, ஆலத்தூர்.

கோ
யம்புத்தூரில், மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம் ஒன்று இருப்பதைப் பசுமை விகடன் மூலம்தான் தெரிந்தது. அதுவும் அங்கு 35-க்கும் மேற்பட்ட வேளாண் இயந்திரங்கள் உள்ளன என்பதை அறிந்தபோது, ஆச்சர்யமாக இருந்தது. விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களை, தேனீக்களைப்போலத் திரட்டி வந்து கொடுக்கும் ‘புறாபாண்டி’ இன்னும் இன்னும் பறக்கட்டும்; கொடுக்கட்டும்.

- எ ஸ்.கமலாதேவி, சித்தர்கோவில்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

.

[X] Close