அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 6

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மதிப்புக்கூட்டினால் ஏற்றுமதியில் கலக்கலாம்!ஏற்றுமதி

ஏற்றுமதியில் உத்தரவாதமானதும், நீண்ட நாள் தாங்கக்கூடியதுமான பொருள் என்றால் அது மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள்தான். மதிப்புக்கூட்டுவதற்குப் பெரிய பெரிய இயந்திரங்களெல்லாம் தேவையில்லை. சாதாரண முறைகளிலேயே மதிப்புக்கூட்டலாம். உதாரணத்துக்கு வெண்டைக்காயை எடுத்துக் கொள்வோம். வெண்டைக்காய் ஒரு கிலோ இங்கு 10-15 ரூபாய்க்கு விற்கிறோம். அதையே 1 இன்ச் அளவுக்கு சிறிதாக நறுக்கி மோரும், உப்பும் கலந்த கலவையில் சேர்த்து வெயிலில் காயவைத்தால் வெண்டை வத்தல் தயார். 3 கிலோ வெண்டைக்காயை நறுக்கி காயவைத்தால் ஒரு கிலோ வத்தல் கிடைக்கும். 1 கிலோ வத்தல் 110 ரூபாய்க்குச் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவுக்கு அனுப்பலாம். நம் நாட்டிலும் இந்த விலைக்குத்தான் விற்பனையாகிறது. 3 கிலோ வெண்டைக்காய் விற்பனையின் மூலம் 30-45 ரூபாய்தான் கிடைக்கும். அதையே மதிப்புக்கூட்டினால் லாபத்தின் அளவு அதிகரிக்கிறது. நம்மிடையே ஒரு பழக்கம் இருக்கிறது ‘முத்தலைத்தான் வத்தல் போடுவோம்’ என்று நினைக்கின்றனர். இந்த வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்