‘நெல்’ ஜெயராமன் உடல் நலம் சீராகி வருகிறது! | Nel Jayaraman health is getting better! - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/11/2018)

‘நெல்’ ஜெயராமன் உடல் நலம் சீராகி வருகிறது!

பசுமைக் குழு

பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்ததில் முக்கிய பங்காற்றி வந்தவர் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அடுத்த கட்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த ‘நெல்’ ஜெயராமன். இவர் கடந்த சில மாதங்களாகத் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில் திரைத்துறையைச் சேர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், கார்த்தி, சத்யராஜ், சூரி உள்ளிட்டோர் சந்தித்தனர். திமுக தலைவர் ஸ்டாலின், சீமான், திருநாவுக்கரசர், வைகோ உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இவர்களில் சிலர் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளையும் ஏற்பதாகவும் சிலர் நிதியுதவியும் அளித்துள்ளனர். இவர்களைத் தொடர்ந்து அமைச்சர்கள் விஜயபாஸ்கர், துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோரும் சந்தித்து பேசினர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

.

[X] Close