படைப்புழுத் தாக்குதல்... படையெடுத்த விவசாயிகள்! | Farmers protest delay in crop insurance benefit disbursal - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/11/2018)

படைப்புழுத் தாக்குதல்... படையெடுத்த விவசாயிகள்!

டைப்புழுத் தாக்குதல் மூலம் பயனற்றுப்போன மக்காச்சோளப் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வலியுறுத்தி, அண்மையில் விவசாயிகள் சோளக் கதிர்களுடன் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரம் ஆகியவை மானாவாரி விவசாயம் நிறைந்த பகுதிகளாகும். இப்பகுதியில் மானாவாரியாகக் கம்பு, சோளம், உளுந்து, பாசி, மக்காச்சோளம், வெள்ளைச்சோளம், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு விளைவிக்கப்பட்ட மக்காச்சோளப் பயிர்களில் படைப்புழுக்களின் தாக்குதலால் பயிர்கள் முழுவதும் சேதம் அடைந்துள்ளதாகவும், சேதமடைந்த பயிர்களைக் கணக்கிட்டு உடனடியாக இழப்பீடு வழங்கிடவும் வலியுறுத்தி விவசாயிகள் படைப்புழுக்கள் தாக்கிய மக்காச்சோளப் பயிர்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க

[X] Close

.

[X] Close