சமையலுக்குக் காய்கறிகள்... பூஜைக்கு மலர்கள்..! | Vegetables for cooking and flowers for pooja - Chennai woman about Terrace garden - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/11/2018)

சமையலுக்குக் காய்கறிகள்... பூஜைக்கு மலர்கள்..!

மாடித்தோட்டம்

“நகரத்துல இருக்குற மக்களுக்கு நல்ல இயற்கைக் காய்கறிகள் கிடைக்கிறதில்ல. ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிச்ச காய்கறிகள்தான் அதிகமாகக் கிடைக்குது. அந்தக் காய்கறிகளைச் சாப்பிட்டா நோய்கள்தான் வரும். உடம்புக்குச் சத்து கிடைக்கிறதில்ல. நகரத்துல வாழற நாம இயற்கையில விளைஞ்ச சத்தான காய்கறிகளைச் சாப்பிடணும்னா அதுக்கு ஒரே வழி, மாடித்தோட்டம்தான்” என்று மாடித்தோட்டத்துக்குக் கட்டியம் கூறுகிறார், சென்னை, புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த வரலட்சுமி.

இவர் மாடித்தோட்டம் அமைத்துத் தன்னுடைய வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை விளைவித்துக் கொள்கிறார்.

தன்னுடைய மாடித்தோட்டம் குறித்துப் பேசிய வரலட்சுமி, “எட்டு வருஷமா மாடித்தோட்டம் அமைச்சுப் பராமரிச்சுட்டுருக்கேன். 20 தொட்டிகள்ல ஆரம்பிச்ச மாடித்தோட்டம் இப்போ 200 தொட்டிகளா விரிவடைஞ்சுருக்கு. மாடித்தோட்டம் அமைக்குறதுக்குப் பணத்தை விட மனம்தான் முக்கியம்.

ஆரம்பத்துல மல்லிகை, முல்லை, ரோஜானு பூச்செடிகளைதான் நட்டு வெச்சேன். அடுத்துக் கீரைகள், காய்கறிகள்னு வளர்க்க ஆரம்பிச்சேன். ‘ஆர்கானிக் கார்டன் ஃபவுண்டேஷன்’-ங்குற ஃபேஸ்புக் குரூப் மூலமாத்தான் பல தகவல்களைத் தெரிஞ்சுகிட்டேன். இப்போ நானும் எனக்குத் தெரிஞ்ச தகவல்களைச் சொல்லிக் கொடுத்துட்டுருக்கேன்” என்ற வரலட்சுமி செடிகளைக் காட்டியபடியே தொடர்ந்தார்...

[X] Close

.

[X] Close