திண்டுக்கல் பூட்டை உடைத்த கஜா!

புயல்

யானை புகுந்த கரும்புத் தோட்டமாகச் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது, திண்டுக்கல் மாவட்டம். குறிப்பாகக் கொடைக்கானல் பகுதி அதிகமாகவே சிதிலமடைந்து கிடக்கிறது. மலைப்பயிர்கள், சமவெளிப்பயிர்கள் என அனைத்து வகையான பயிர்களும் விளையும் மாவட்டம், திண்டுக்கல். கேரட், வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு, ஆப்பிள், அவகோடா, சௌசௌ, காபி, எலுமிச்சை, தென்னை, வாழை, மக்காச்சோளம், பலவிதக் காய்கறிகள்... என அனைத்துப் பயிர்களும் நாசமாகியிருக்கின்றன, திண்டுக்கல்லில் உள்ள விவசாய நிலங்கள். கொடைக்கானல் பகுதியில் ஒரு தலைமுறை விவசாயமே நாசமாகிவிட்டது.

மலை வாழை, மிளகு போன்ற பயிர்களைச் சாகுபடி செய்யும் விவசாயிகள் லட்சக் கணக்கில் நஷ்டத்துக்குள்ளாகி உடைந்து போயிருக்கிறார்கள். வத்தலகுண்டு, பழநி, நிலக்கோட்டை ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 30,000 வாழை மரங்கள் சாய்ந்துவிட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்