‘‘கருத்தா வளர்த்து கஜாவுக்குக் காவு கொடுத்துட்டோம்!” | Gaja diaster in Theni - Pasumai Vikatan | பசுமை விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (25/11/2018)

‘‘கருத்தா வளர்த்து கஜாவுக்குக் காவு கொடுத்துட்டோம்!”

புயல்

டந்த 16-ம் தேதி தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல், எச்சரிக்கை விடப்படாத மாவட்டமான தேனியையும் தாக்கியது. குறிப்பாகத் தேவதானப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளைச் சூறைக்காற்றுடன் புயல் தாக்கியதில், பல நூறு ஏக்கரில் பயிர் செய்யப்பட்டிருந்த விவசாயப் பொருள்கள் நாசமடைந்தன. குறிப்பாகச் செங்கரும்பு. தேனி மாவட்டக் கரும்புக்கு எப்போதுமே தனிச்சுவை உண்டு. இந்நிலையில் “பத்து மாசமா பாதுகாத்து வளர்த்து வந்தோம். கண்ணும் கருத்துமா வளர்த்த கரும்பைக் கஜா புயலுக்குக் காவு கொடுத்து விட்டோம்!” என்று சோகம் ததும்ப பேசினார் கரும்பு விவசாயி சேக் அப்துல்லா.

“பொங்கல் பண்டிகைக்காக, ஐந்து ஏக்கர்ல நான் செங்கரும்பு போட்டிருந்தேன். இப்போ அதுல மூணு ஏக்கர் கரும்பு புயலால் சாய்ந்தும் முறிந்துவிட்டது. காமாட்சியம்மன் கோவில், கட்டமாயி, காமக்காபட்டி கருப்பசாமி கோவில், மஞ்சலாறு அணையை ஒட்டிய பகுதிகள் எனச் சுமார் 150 ஏக்கர் வரை பயிர் செய்யப்பட்டிருந்த செங்கரும்புகள் அனைத்தும் நாசமகிடுச்சு. அடித்த புயல் காற்றில், கரும்புகள் உடைந்து துண்டு துண்டாகிப்போனது. மேலும், வேறோடு சாய்ந்தது. ஒரு ஏக்கருக்கு 3 லட்சம் வரை செலவு செஞ்சிருக்கோம். இப்போ எல்லாம் போச்சு. அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.!” என்றார் வேதனையோடு.

[X] Close

.

[X] Close