8 ஏக்கர்... பாரம்பர்ய நெல்... ஆண்டுக்கு ரூ. 2,88,000 - மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

மகசூல்

 ‘ரசாயன முறை விவசாயம் மேற்கொள்ளும்போது உரங்களின் அளவைப் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வர வேண்டியிருக்கும். ஆனால், மகசூல் அளவு குறைந்து கொண்டேயிருக்கும். இயற்கை விவசாயத்தில் ஆரம்ப நிலையில் அதிக இடுபொருள்கள் தேவைப்படும். நாளடைவில் படிப்படியாக இடுபொருள்களின் தேவை குறைந்துகொண்டே வரும். அதே நேரத்தில் மகசூல் அளவு படிப்படியாக அதிகரித்துக் கொண்டேயிருக்கும்’ என்று இயற்கை வல்லுநர்கள் சொல்வார்கள். இக்கூற்றை நிரூபித்துக் காட்டியிருக்கிறார், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாணசுந்தரம். எட்டு ஏக்கர் நிலத்தில் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து வருகிறார், இவர்.

வலங்கைமான் தாலூகா, பொன்மங்கலத்தில் இருக்கிறது, கல்யாணசுந்தரத்தின் வயல். ஒரு காலைப்பொழுதில் கல்யாணசுந்தரத்தைச் சந்திக்கச் சென்றோம். குறுவைப்பருவத்தில் 2 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்த சொர்ணமசூரி, செழிப்பாக விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது. 6 ஏக்கர் பரப்பில், சம்பாப்பருவத்தில் விதைத்த தூயமல்லி, மாப்பிள்ளைச்சம்பா, கறுப்புக்கவுனி, வெள்ளைப்பொன்னி ஆகியவை இளம்பயிராக இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்