தண்டோரா

பசுமைக் குழு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்


இலவசப் பயிற்சிகள்

மதிப்புக்கூட்டிய பால் பொருள்கள்

சென்னையை அடுத்த அலமாதி, கொடுவெளியில் உள்ள தமிழ்நாடு உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ‘மதிப்புக்கூட்டிய பால் பொருள்கள் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு,தொலைபேசி: 044 27680214/15.

நாட்டுக்கோழி வளர்ப்பு

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 18-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 20-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0452 2483903.

மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் டிசம்பர் 13-ம் தேதி ‘வன மரங்கள் சாகுபடி’, 18-ம் தேதி ‘பண்ணைக்குட்டையில் மீன் வளர்ப்பு’, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் அமைத்தல்’, 27-ம் தேதி ‘இயற்கை விவசாய வழிமுறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு,

செல்போன்: 77088 20505, 94885 75716.

செட்டுநாட்டுப் பலகாரங்கள்

சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூரில் உள்ள கிராமியப் பயிற்சி மையத்தில், டிசம்பர் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை, ‘இயற்கை முறையில் சோப்பு, பினாயில் மற்றும் இதர சுகாதாரப் பொருள்கள் தயாரித்தல், 24-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ‘செட்டிநாடு பலகாரங்கள் தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்

தொடர்புக்கு,

செல்போன்: 94438 44651, 04565 250651.

ஆடு வளர்ப்பு

சேலம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 18 மற்றும் 19-ம் தேதிகளில் ‘ஆடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.
தொடர்புக்கு, தொலைபேசி: 0427 2410408.

இலவசப் பயிற்சிகள்

வெள்ளாடு வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 18-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 26-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

கட்டணப் பயிற்சிகள்

ஒருங்கிணைந்த பண்ணை

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 28-ம் தேதி ‘மானாவாரி பகுதி தொழில்நுட்ப பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும். மேலும், டிசம்பர் 27-ம் தேதி ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ இலவசப் பயிற்சியாக நடைபெற உள்ளது. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

புயலில் மரங்களைக் காப்பது எப்படி?

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள எழில்சோலை இயற்கை வேளாண் பண்ணையில், டிசம்பர் 22-ம் தேதி ‘புயலில் மரங்களைப் பாதுகாப்பது எப்படி, ஒருங்கிணைந்த பண்ணை, மண் பரிசோதனை செய்தல், பண்ணைக் காடுகள் மற்றும் மூலிகைத் தோட்டம் அமைத்தல்’ என்ற தலைப்புகளில் ஒருநாள் பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் 200 ரூபாய். முன்பதிவு முக்கியம்.
தொடர்புக்கு: 94436 38545, 95979 56895.

மண்புழு உரம் தயாரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 29-ம் தேதி ‘அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் 100 ரூபாய். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.


அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த
3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக் கொள்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick