மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்! | Manpuzhu mannaru - Pasumai Vikatan | பசுமை விகடன்

மண்புழு மன்னாரு: பெட்ரோல், டீசல் வேண்டாம்... மாடுகள் மூலமும் பேருந்துகள் ஓடும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தியோசிஓவியம்: வேலு

பரபரப்பான ஒரு காலை நேரத்துல, பத்திரிகை தகவல் அலுவலகத்திலிருந்து (Press Information Bureau) ‘‘நவம்பர் 22-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, மலிவான இயற்கை எரிவாயு திட்டத்தை அறிவிக்கிறார். அது சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு, மாலை 4 மணிக்கு நடக்கவுள்ளது. கட்டாயம் நீங்கள் வர வேண்டும்’’னு அழைப்பு வந்துச்சி. பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையெல்லாம் நாளுக்கு நாள் அதிகரிச்சுட்டு இருக்கிற இந்த நேரத்துல, அரசாங்கம் இயற்கை எரிவாயு பக்கம் திரும்பியிருக்கேன்னு சந்தோஷப்பட்டுக்கிட்டு, புறப்பட்டுப் போனேன்.

நட்சத்திர ஹோட்டல்ல நடந்த இந்த நிகழ்ச்சிக்குப் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை என்னவோ குறைவாத்தான் இருந்துச்சி. வழக்கமா, இந்த மாதிரி நல்ல விஷயங்களுக்குக் கூட்டம் குறைவாத்தான் இருக்கும். நிகழ்ச்சி ஆரம்பிச்சவுடனே, இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி தகவல்களைக் கொட்ட ஆரம்பிச்சாரு.

‘‘இவ்வளவு நாள்களா, நம்ம வீடு தேடி கேஸ் சிலிண்டரைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். இனிமேல், தண்ணீர் இணைப்பு மாதிரி, வீட்டுக்கு வீடு கேஸ் லைன் பைப் இருக்கும். அந்தப் பைப்பை அடுப்பில் இணைத்து, சமையல் செய்யலாம். அதாவது, அழுத்தமேற்றப்பட்ட இயற்கை எரிவாயு (Compressed Natural Gas-CNG) அதிக அளவில், வாகன எரிபொருளாகப் பயன்படுத்துவது, குழாயில் செலுத்தப்படும் இயற்கை எரிவாயு (Piped Natural Gas-PNG) வீடுகளில் பயன்படுத்துவதாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த இயற்கை எரிவாயு எதிர்காலத்தில் பெரிய வரவேற்பைப் பெறும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick