அள்ளித்தரும் அக்கரைச் சீமை... ஏற்றுமதிக்கு வழிசொல்லும் வெற்றி சூத்திரங்கள்! - 7

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஏற்றுமதிகே.எஸ்.கமாலுதீன்

இந்திய நிலக்கடலையை விரும்பும் மலேசியா!

ஏற்றுமதியில் காய்கறிகள், பழங்கள் வரிசையில் வெல்லத்துக்கும் முக்கிய இடம் உள்ளது. மூன்றாயிரம் ஆண்டுகள் பாரம்பர்யம் கொண்டது, வெல்லம். உலக அளவிலான வெல்ல வர்த்தகத்தில் 70 சதவிகித அளவு இந்தியாவிலிருந்துதான் ஏற்றுமதியாகிறது. சர்க்கரையில் குளுக்கோஸ், பிரக்டோஸ் ஆகியவை மட்டுமே உள்ளன. வெல்லத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் ஆகியவற்றோடு வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவையும் அடங்கி உள்ளதால், மருத்துவத் தன்மை கொண்டதாகக் கருதப் படுகிறது. நம் நாட்டின் கண்டுபிடிப்பான வெல்லம், 2017-18-ம் ஆண்டில் 2.5 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு ஏற்றுமதியாகியுள்ளது. அதன் மூலம் 1,380 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது.

கரும்புச்சாற்றைக் காய்ச்சிதான் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. ஆனால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது அவை ‘கியூப்’ (Qube), ‘ரவுண்டு’ (Round) என்ற பெயர்களில் அனுப்பப்படுகின்றன. அச்சு வெல்லத்தின் அளவு (சைஸ்) இரண்டிலிருந்து இரண்டரை அங்குல(இன்ச்) அளவு இருக்க வேண்டும். இவற்றை அரைக்கிலோ அளவில் பேக் செய்ய வேண்டும். அதேபோல, ஒவ்வொரு உருண்டைவெல்லத்தின் அளவும் அரைக்கிலோ அளவில் இருக்க வேண்டும். எடை அளவு எக்காரணம் கொண்டும் குறையக்கூடாது. எடைக்குறைவு கண்டுபிடிக்கப்பட்டால் திரும்பவும் இறக்குமதியாளரிடமிருந்து ஆர்டர் கிடைக்காது. அதனால், எடையைச் சரியாக கையாள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick