வேஸ்ட் டீகம்போஸர்... அங்கக விவசாயிகளின் அமுதசுரபி! | Waste Decomposer - A boon to farmers - Pasumai Vikatan | பசுமை விகடன்

வேஸ்ட் டீகம்போஸர்... அங்கக விவசாயிகளின் அமுதசுரபி!

இயற்கை

விவசாய நிலத்தைச் சோதனைக் கூடமாக மாற்றிப் புதுப்புது விஷயங்களைச் சோதனை செய்து பார்க்க வேண்டும்” என்று அடிக்கடி சொல்வார், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார். அப்படி விவசாயிகள் கண்டுபிடித்து மேற்கொண்டு வரும் தொழில்நுட்பங்களைக் கற்று தனது பண்ணையில் செயல்படுத்தி வருகிறார், கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரி குமாரபாளையம் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கதிரேசன். “காசி, ராமேஸ்வரம்னு ஆன்மிகப்பயணம் போறது போல, நான் பன்னிரண்டு வருஷமா இயற்கை விவசாயப் பயணம் போய்ட்டுருக்கேன். ‘பசுமை விகடன்’ புத்தகத்துல இடம்பெறுகிற விவசாயிகளைச் சந்திச்சு அவங்களோட தொழில்நுட்பங்களைத் தெரிஞ்சுட்டு வர்றதுதான் என்னோட விவசாயப் பயணத்தோட நோக்கம். இந்தப் பயணத்துல ஏராளமான விஷயங்களைக் கத்துக்கிட்டு அதை என்னோட முப்பது ஏக்கர் பண்ணையில செயல்படுத்திட்டிருக்கேன்” என்று பெருமையாகச் சொல்லி வருகிறார், கதிரேசன்.

ஓங்கி வளர்ந்த தென்னை மரங்கள். இடையில் நிலம் தெரியாத அளவுக்குப் பசுமை போர்த்தியிருக்கும் தட்டைப்பயறுச் செடிகள். அவற்றுக்குச் சுழன்று சுழன்று நீரைத்தெளித்துக் கொண்டிருந்தன, தெளிப்பு நீர்ப்பாசனக் குழாய்கள். அந்த எழில் கொஞ்சும் சூழ்நிலையில், பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தார், கதிரேசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick