130 தாய்க்கோழிகள்... மாதம் ரூ.15,000 லாபம்... அசில் கோழிகள் கொடுக்கும் அசத்தல் வருமானம்!

கால்நடைதுரை.நாகராஜன்

விவசாயம் பொய்த்துப் போகும் சூழ்நிலைகளில் விவசாயிகளுக்குக் கைகொடுக்கும் உபதொழில் கால்நடை வளர்ப்புதான். ஆடு, மாடு, கோழி... எனப்பல கால்நடைகள் இருந்தாலும், குறுகிய காலத்தில் நிறைவான வருமானம் தருபவை நாட்டுக்கோழிகள். அதனால்தான் விவசாயிகள் பலரும் நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு நல்ல லாபம் எடுத்து வருகிறார்கள். அந்தவகையில், நாட்டுக்கோழிகளை வளர்த்து நல்ல லாபம் எடுத்து வருகிறார், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்.

கள்ளக்குறிச்சி தாலூகாவுக்குட்பட்ட குன்னியூர் என்ற கிராமத்தில்தான், ராமச்சந்திரனின் பண்ணை உள்ளது. முழுமையாகப் பனி அகலாத ஒரு காலை வேளையில் பண்ணைக்குள் நுழைந்தோம். கோழிகளுக்குத் தீவனம் வைத்துக் கொண்டிருந்த ராமச்சந்திரனிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

“சின்ன வயசுல இருந்தே விவசாயம் எனக்குப் பரிச்சயம். பத்தாம் வகுப்பு முடிச்சதும் விவசாயத்துக்கு வந்துட்டேன். முப்பத்தி நாலு வருஷமா விவசாயம் பார்த்துக்கிட்டு இருக்கேன். கிணத்துப் பாசனத்துல 6 ஏக்கர் நிலம் இருக்கு. கரும்பு, நெல், கோழிக்கொண்டை, மாட்டு தீவனம்னு சாகுபடி செஞ்சுக்கிட்டுருக்கேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick