இழந்தது மலையளவு... கொடுப்பது கடுகளவு... அரசின் புயல் நிவாரண மோசடி!

இழப்பீடு

தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடிச்சென்றிருக்கும் ‘கஜா’ புயலால் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருக்கிறார்கள்  விவசாயிகள். ஆண்டுக்கணக்கில் வருமானம் கொடுத்துக் கொண்டிருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து கிடக்கின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரங்களான நெல், வாழை, கரும்பு, மா, பலா, தேக்கு, மக்காச்சோளம், மரவள்ளி, வெற்றிலை உள்ளிட்ட பலவிதமான பயிர்கள் நாசமாகிக் கிடக்கின்றன.

இந்நிலையில் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் விவசாயிகள், மத்திய, மாநில அரசுகளின் நிவாரணம் மற்றும் இழப்பீடுகளைத்தான் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார்கள்.

மத்திய அரசு இதுசம்பந்தமாகப் பெரிய அறிவிப்பை எதுவும் வெளியிடாத நிலையில், இழப்பீடு மற்றும் நிவாரணப்பணிகளுக்காக ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி... தென்னை மரங்களை இழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் மற்றும் மறு சாகுபடிக்காக ஒரு ஏக்கர் பரப்புக்கு 1,05,840 ரூபாய் இழப்பீடு; வாழை, நெல், கரும்பு, காய்கறிகள் மற்றும் மலர்கள் உள்ளிட்ட பயிர்களுக்கு ஒரு ஏக்கர் பரப்புக்கு 5,400 ரூபாய் இழப்பீடு என அறிவித்துள்ளது, தமிழக அரசு. இதைத்தொடர்ந்து மிகவும் குறைவாக இழப்பீட்டுத்தொகை அறிவிக்கப்பட்டு இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள், விவசாயிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick