மேக்கேதாட்டூ-2.O - சட்டப்போராட்டம்தான் தீர்வு கொடுக்கும்!

நாட்டு நடப்பு

காவிரி நதி விவகாரத்தில், கர்நாடக மாநிலம் செய்யும் அழிச்சாட்டியங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடக எல்லைக்குள் உள்ள மேக்கேதாட்டூ பகுதியில் அணை கட்டுவதில் உறுதியாக இருக்கிறது, கர்நாடகா. சமீபத்தில் மத்திய நீர்வள ஆணையம், அணை கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ளும் விரிவான வரைவுத் திட்டத்துக்கு அனுமதி அளித்திருப்பது, தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளும் நீர்வள ஆணையத்தின் செயல்பாட்டுக்குக் கடும் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றன. வரைவுத் திட்டத்துக்கு அனுமதி அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது, தமிழக அரசு.

இவ்விவகாரம் குறித்து, தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீரப்பன் சில தகவல்களை நம்மிடம் சொன்னார். “தொழில்நுட்பம் தொடர்பான ‘தடையில்லாச் சான்றிதழ்’ வழங்குவதுதான் மத்திய நீர்வள ஆணையத்தின் பணி. அணை கட்டுவதற்கான விரிவான வரைவுத் திட்டத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டியது, மத்திய நீர்வளத்துறைதான். ஆனால், மத்திய நீர்வள ஆணையம் இதற்கு அனுமதி கொடுத்திருப்பது, கேலிக்கூத்து” என்ற வீரப்பன் தொடர்ந்தார்...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick