அதலைக்காய்... கரிசல் மக்களுக்குக் கிடைத்த அற்புதம்! - அரை ஏக்கர்... 3 மாதங்கள்... ரூ. 35,000 லாபம்!

மகசூல்

திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் பிரபலமான காய்களில் ஒன்று ‘அதலைக்காய்’. பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்த இக்காய், பேச்சுவழக்கில் ‘அதலக்காய்’ என்று அழைக்கப்படுகிறது. கோவைக்காய்போலக் கண்மாய்க் கரைகள், வேலியோரங்கள் போன்றவற்றில் வளரும் கொடி வகை இது.

ஆரம்பத்தில் களைச் செடியாய்ப் பார்க்கப்பட்டது. இப்போது அதலைக்காயின் மருத்துவக் குணங்கள் தெரிய வர... பலரும் இதை விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டனர். இதில் கசப்புத்தன்மை குறைவாகத்தான் இருக்கும். குடற்புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது.

இது பருவத்தில் மட்டும் விளையும் காய் என்பதால், இதை வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துகிறார்கள் மக்கள். வேலியோரப்பயிரான இதற்குச் சத்தான சந்தை வாய்ப்பு இருப்பதால், இதை மானாவாரி நிலத்தில் தனிப்பயிராகச் சாகுபடி செய்து வருகிறார், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி சாத்தாவு.

விருதுநகரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செங்குன்றாபுரம் கிராமத்தில் தான் சாத்தாவுவின் நிலம் இருக்கிறது. படர்ந்து கிடந்த அதலைக்காய் கொடிகளில் காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சாத்தாவுவைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick