பலமான வருமானம் தரும் பந்தல் சாகுபடி! - 40 சென்ட் நிலத்தில் ரூ.90,000

மகசூல்ஆர்.குமரேசன்

“விவசாயம் செய்றது ரொம்பக் கஷ்டம்னு பலபேரு சொல்றாங்க. ஆனா, எங்களைப் பொறுத்தவரை விவசாயம் ரொம்ப சுலபமானது. அடிப்படையை சரியாகப் புரிஞ்சுகிட்டு, மண்ணோடு பேசி, பயிரோடு பழகி, இயற்கையை இம்சிக்காம இருந்தாலே போதும். விவசாயத்துல ஜெயிச்சிடலாம். இதுல நாம தேர்வு செய்ற பயிர், சாகுபடி முறைகளும் சரியாக இருக்கணும்ங்கிறது முக்கியம். இது எல்லாம் சரியா இருந்தா, எந்தத் தடைகளும் நம்மை நஷ்டப்படுத்த முடியாது. தினமும் 2,000 லிட்டர் தண்ணீர் மட்டுமே வெச்சு, நாற்பது சென்ட் இடத்துல, நல்லா சம்பாதிக்கிறோம்” நம்பிக்கை கொடுக்கும் விதமாகப் பேசுகிறார், திண்டுக்கல் மாவட்டம், தவசிமடைப் பகுதியைச் சேர்ந்த மருதமுத்து.

சம்பங்கிச் சாகுபடி மூலமாக, ‘பசுமை விகடன்’ வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான் மருதமுத்து-வாசுகி தம்பதி. இயற்கை முறை சம்பங்கிச் சாகுபடியில் இவர்கள் கடைப்பிடித்த தொழில்நுட்பம் நல்ல மகசூலைக் கொடுத்ததால்... தமிழக அளவில் பல விவசாயிகள் இவர்களின் பண்ணையை நேரில் பார்த்து, இவர்கள் பின்பற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சம்பங்கிச் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். அப்படிச் சம்பங்கிச் சாகுபடியில் வெற்றி பெற்றவர்களின் அனுபவங்களையும் பசுமை விகடன் இதழில் அவ்வப்போது பதிவு செய்து வருகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick