அரிசிக் கடைக்கு மாறிய பூச்சிக்கொல்லி கடைக்காரர்! | Business Man Campaigns about Benefits of Organic farming - Pasumai Vikatan | பசுமை விகடன்

அரிசிக் கடைக்கு மாறிய பூச்சிக்கொல்லி கடைக்காரர்!

களப்பணிஇ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

துரை மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி பாலசுப்பிரமணியனுக்குப் பசுமைவிகடன் இதழை அறிமுகப்படுத்திய முன்னாள் பூச்சிக்கொல்லிக் கடைக்காரர் ரவீந்திரன், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் அரிசிக் கடை நடத்தி வருகிறார். அவரிடம் பேசினோம். “அப்பா 1975-ம் வருஷத்துல இருந்து விதை, உரம், பூச்சிக்கொல்லி விற்பனை செஞ்சிட்டிருந்தார். 1980-ம் வருஷம் அப்பாகூட நானும் சேர்ந்து வியாபாரத்தை நடத்திட்டிருந்தேன். விவசாயம் சம்பந்தமான தொழில் செய்றதால அது சம்பந்தப்பட்ட புத்தகங்கள், செய்திகளைப் படிக்கிறதை வழக்கமா வெச்சிருந்தேன். அந்த வகையிலதான் பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்சேன். பசுமை விகடன் வெளிவந்ததிலிருந்து படிக்கிறேன். அதுவரைக்கும் ‘ரசாயன உரம் போட்டா மட்டும்தான் பயிர் செழிக்கும். பூச்சிக்கொல்லிகளால் மட்டும்தான் பூச்சிகள் ஒழியும்’னு நினைச்சுட்டு இருந்தேன். பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்ச பிறகுதான், ‘இயற்கை விவசாயம்’னு ஒண்ணு இருக்கு. அதுதான் நம்ம தாத்தா, பாட்டி காலத்துல செஞ்ச விவசாயம்’னு தெரிஞ்சது.

வழக்கமா கடைக்கு வர்ற விவசாயிகள், பூச்சிக்கொல்லிகளை மாத்தி மாத்திக் கேட்டு வாங்கிட்டுப் போய்த் தெளிப்பாங்க. ஆனாலும் பூச்சிகள் கட்டுப்படலைனு புலம்புவாங்க. எனக்கும் அதுக்கான காரணம் பிடிபடலை. ஆனா, பசுமை விகடன் மூலமாத்தான், ‘பூச்சிக்கொல்லிகளை அதிகம் பயன்படுத்தப் பயன்படுத்த பூச்சிகள் எதிர்ப்புத்திறனை வளர்த்துக்கும்’னு தெரிஞ்சுக்கிட்டேன். அதுக்கப்புறம் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மேல எனக்கு வெறுப்பு வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick