ஆத்தூர் கிச்சிலிச் சம்பாவில் அசத்தல் லாபம்!

மகசூல்த.ஜெயகுமார், படங்கள்: சி.ரவிக்குமார்

“என்கிட்ட அறுவடை செஞ்ச அறுபதாம் குறுவை நெல் கொஞ்சம் இருந்தது. எப்படி விற்பனை செய்யலாம்னு யோசிச்சுட்டு இருந்தப்போ, ‘பசுமை விகடன்’ புத்தகத்துல வர்ற பசுமைச் சந்தை ஞாபகத்துக்கு வந்துச்சு. உடனே எழுதி அனுப்பினேன். அது புத்தகத்துல பிரசுரமான அன்னிக்கே என்கிட்ட இருந்த மொத்த நெல்லையும் சிலபேர் வாங்கிக்கிட்டாங்க. அப்போதான் எனக்குப் பசுமை விகடனோட அருமையும் பாரம்பர்ய நெல்லுக்கான தேவையும் புரிஞ்சது. நான் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்றதுக்கே பசுமை விகடன்தான் காரணம்” என்று மகிழ்ச்சியாகச் சொல்கிறார் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் வசித்து வரும் ராஜா, அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிங்கிலிமேடு எனும் கிராமத்தில் விவசாயம் செய்துவருகிறார். பசுமை விகடன் பன்னிரெண்டாம் ஆண்டுச் சிறப்பிதழுக்காக ராஜாவைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick