மாடியில் தோட்டம்... மனதுக்கு புத்துணர்ச்சி!

வீட்டுத்தோட்டம்துரை.நாகராஜன், படங்கள்: ஜெ.பரணிதரன்

ரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி, குளிர்சாதனப் பெட்டிக்குள் அடுக்கி வைத்து, தினமும் கொஞ்சம் காய்கறிகளை எடுத்துச் சமைத்துச் சாப்பிடுவதுதான் பெரும்பாலான நகரவாசிகளின் வழக்கம். அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நஞ்சற்ற உணவைத்தேடிப் பயணிக்கும் பலர், தங்களுக்குத் தேவையான காய்கறிகளை வீட்டுத்தோட்டம்மூலம் உற்பத்தி செய்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்து வருகிறார்கள்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் ‘கவிஞர்’ கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன். ‘கண்ணதாசன் பதிப்பக’த்தை நடத்திவரும் இவர், கடந்த எட்டு ஆண்டுகளாக, தன் குடும்பத்துக்குத் தேவையான காய்கறிகளை மாடித்தோட்டத்திலேயே விளைவித்து வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick