ஆடு, கோழி, சுருள்பாசி... இலங்கை தமிழர்களின் ஒருங்கிணைந்த பண்ணை!

பண்ணையம்துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார்

‘பசுமை விகடன்’ 2007-ம் ஆண்டு வெளியான முதல் இதழில், ‘ஒரு கிலோ ஆயிரம் ரூபாய்! பாசியில் கொழிக்குது பலன்’ என்ற தலைப்பில்... அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை மக்கள், ‘ஸ்பைருலினா’ எனும் சுருள்பாசி வளர்ப்பது பற்றி எழுதியிருந்தோம். அப்போது ஒரே ஒரு தொட்டியில் மட்டும் வளர்த்து வந்த அவர்கள், தற்போது அதிக எண்ணிக்கையிலான தொட்டிகளில் ஸ்பைருலினா வளர்த்து வருகிறார்கள். அதோடு, ஒருங்கிணைந்த பண்ணை அமைத்துக் காய்கறிச் சாகுபடி, கால்நடை வளர்ப்பு என்றும் கலக்கி வருகிறார்கள்.

சென்னையிலிருந்து பழைய மாமல்லபுரம் செல்லும் சாலையில் சிறுசேரி தொழில்நுட்பப் பூங்காவுக்கு அருகில் இருக்கும் நத்தம் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள்தான் இதில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்கள் ‘ஈழ ஏதிலிய மறுவாழ்வுக் கழக வாழ்வாதாரப் பகுதித் திட்டம்’ மூலம் ஸ்பைருலினா வளர்த்து வருகிறார்கள். இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ரத்தின ராஜ சிங்கத்திடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick