கொடுக்க வேண்டியது ரூ.1,300... கொடுத்தது ரூ. 160...

பிரச்னைகு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

டந்த நான்கு ஆண்டுகளாகக் கரும்புக்குத் தமிழக அரசு அறிவித்த பரிந்துரை விலையைக் கொடுக்காமல் இழுத்தடித்து வருகின்றன தனியார் சர்க்கரை ஆலைகள். இந்தவகையில் தனியார் ஆலைகள், விவசாயிகளுக்குத் தர வேண்டிய நிலுவைத்தொகை கிட்டத்தட்ட 1,400 கோடி ரூபாய். பொதுத்துறை மற்றும் கூட்டுறவு ஆலைகள் விவசாயிகளுக்குத் தர வேண்டிய தொகை 230 கோடி ரூபாய். இந்தத் தொகையை வழங்கக்கோரி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி... எனப் பலவிதங்களில் விவசாயிகள் ஆண்டுக்கணக்கில் போராடி வருகிறார்கள். ஆனால், ஆலைகள் அவற்றைக் கண்டுகொள்வதேயில்லை.

இந்தப் பிரச்னை தொடர்பாகத் தமிழக அரசின் சார்பில் ஐந்து முத்தரப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், அரசு சார்பில் விவசாயிகளுக்கு நன்மை செய்யும் விதத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அதே சமயத்தில், ‘ஜனவரி 12-ம் தேதிக்குள் இந்தப் பிரச்னையில் சர்க்கரை ஆலைகள் இறுதி முடிவெடுக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick