தஞ்சாவூர் ‘குட்டைகாரி!’ - ‘பலே’ பாரம்பர்ய மாடு...

கால்நடைகு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

‘அதிகமாகப் பால் கிடைக்கும்’ என்ற ஆசையால், விவசாயிகள் பலரும் கலப்பின மாடுகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டனர். இதனால், விவசாயிகளின் உற்ற தோழனாக இருந்து, பல வகைகளிலும் பலன் கொடுத்து வந்த நாட்டுமாடுகள் அழிந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய சூழலில், ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார் மற்றும் ‘ஜீரோ பட்ஜெட் வேளாண் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் ஆகியோர், ‘பசுமை விகடன்’ மூலம் தொடர்ந்து வலியுறுத்திய காரணத்தால் பலரும் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு நாட்டு மாடுகளை வளர்க்கத் தொடங்கியுள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்கம்.

ஓய்வுபெற்ற வங்கி அலுவலரான மாணிக்கம், அம்மாப்பேட்டை அருகே உள்ள நத்தம் செண்பகபுரம் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். ஒரு பகல் பொழுதில் தோட்டத்தில் இருந்த மாணிக்கத்தைச் சந்தித்தோம்.

நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார் மாணிக்கம். “திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பக்கத்துல உள்ள அருந்தவம்புலம்தான் எனக்குப் பூர்வீகம். அப்பா, தாத்தா எல்லாரும் விவசாயம்தான் பார்த்தாங்க. நான் படிச்சுட்டு பேங்க்ல வேலைக்குச் சேர்ந்து, 2011-ம் வருஷம் ஓய்வுபெற்றேன். என்னோட சொந்தக்காரங்க நிறையபேர் பசுமை விகடன் வாசகர்கள். அவங்க மூலமாத்தான் நானும் பசுமை விகடனைப் படிக்க ஆரம்பிச்சேன். அதைப் படிக்கப் படிக்க நானும் விவசாயத்துல ரொம்ப ஆர்வமாயிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick