ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஒப்பற்ற விவசாயம்!

மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

“வேலையில இருந்து ‘ரிட்டையர்டு’ ஆனதுக்கப்புறம் எங்க மனசுல இருந்த வெறுமையைப் போக்கி இன்னமும் எங்களை ‘ஆக்டிவா’ இருக்க வெச்சிருக்குறது இயற்கை விவசாயம்தான். அதுக்கு வழி காட்டிட்டினது ‘பசுமை விகடன்’ புத்தகம்தான்” என்று நெகிழ்ச்சியாகச் சொல்கிறார்கள் மதுரை மாநகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன், அவருடைய மனைவி பொன்னுத்தாய் ஆகியோர்.

மதுரை மாவட்டம், திருவாளை விலக்கிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உடந்தைகுளம் எனும் கிராமத்தில், இவர்கள் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களின் பண்ணை பெயர் ‘பாபுஜி இயற்கைப் பண்ணை’. நாங்கள் சந்திக்க வருகிறோம் என்று முன்கூட்டியே தகவல் சொல்லியிருந்ததால், கணவன், மனைவி இருவரும் நம்மை எதிர்நோக்கிக் காத்திருந்தனர். அவர்களுடைய பண்ணையை அடைந்தவுடன் இளநீர் கொடுத்து உபசரித்துப் பேச ஆரம்பித்தார் பாலசுப்பிரமணியன். “எனக்குச் சொந்த ஊர் சிவகாசி. அப்பா லேத் ஒர்க்‌ஷாப் வெச்சிருந்தாங்க. நான் சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் படிச்சு, அங்கேயே பேராசிரியர் வேலையில் சேர்ந்து 34 வருஷம் பணி செய்துவிட்டு ஓய்வு பெற்றுவிட்டேன். என் மனைவி, அரசு மேல்நிலைப்பள்ளியில தலைமையாசிரியையா இருந்தாங்க. அவங்களும் இப்போ ஓய்வு பெற்றுட்டாங்க. மனைவியோட சொந்த ஊர் மதுரை. அதனால, ரெண்டு பேரும் இங்க செட்டிலாகிட்டோம். என்னோட நண்பர் ஆறுமுகம்ங்கிறவர், விருதுநகர்ல இயற்கை விவசாயம் செஞ்சுட்டிருக்கார். அதைப் பார்த்துதான் எனக்கும் விவசாய ஆசை வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick