12 ஏக்கர், ரூ.23 லட்சம்... சம்பங்கி, அரளி, காட்டு மல்லி, செவ்வந்தி... மலர்ச் சாகுபடியில் மணக்கும் லாபம்! | Profitable Flowers cultivation near Srivilliputhur - Pasumai Vikatan | பசுமை விகடன்

12 ஏக்கர், ரூ.23 லட்சம்... சம்பங்கி, அரளி, காட்டு மல்லி, செவ்வந்தி... மலர்ச் சாகுபடியில் மணக்கும் லாபம்!

மகசூல்ஜி.பழனிச்சாமி, படங்கள்: அ.அ.சூர்யபாரதி

ல நெருக்கடியான சூழ்நிலைகளை விவசாயிகள் தொடர்ந்து சந்தித்து வரும் சூழ்நிலையில்... பரம்பரை விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்கூட, விவசாயத்தைத் தொடர முடியாமல், வேறு தொழில்களுக்கு மாறி வருகிறார்கள். அப்படி விவசாயத்தைவிட்டு வெகுதூரம் சென்ற பலரை, மீண்டும் விவசாயத்துக்குள் அழைத்துவரும் மகத்தான பணியைத் தொடர்ந்து செய்து வருகிறது ‘பசுமை விகடன்’. அதோடு மட்டுமில்லாமல், விவசாயம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த இளைஞர்கள் பலரையும் இயற்கை விவசாயம் செய்ய வைத்து, ‘முதல் தலைமுறை விவசாயிகள்’ பலரையும் உருவாக்கி வருகிறது பசுமை விகடன். அந்த வகையில் விவசாயத்தை விட்டு ஒதுங்கி மாநகராட்சி ஒப்பந்த வேலைகளைச் செய்து வந்த சத்தியநாதன், பசுமை விகடன் மூலமாக இயற்கை விவசாயத்தில் மீண்டும் கால் பதித்து, நல்ல வருமானம் ஈட்டி வருகிறார்.

பசுமை விகடன் 12-ம் ஆண்டுச் சிறப்பிதழுக்காகச் சத்தியநாதனைச் சந்திக்கப் புறப்பட்டோம். உடுமலைப்பேட்டையில் இருந்து திருமூர்த்தி மலை போகும் பாதையில் உள்ள எழில்கொஞ்சும் ஊர் தளி. அங்கிருந்து கண்ணாடிபோல் தண்ணீர் சலசலத்து ஓடும் வாய்க்கால் கரையோரம் ஒரு கிலோமீட்டர் தூரம் பயணித்தால், சத்தியநாதனின் மலர்த் தோட்டத்தை அடையலாம். அதிகாலை நேரத்தில் களத்து மேட்டில் குவித்து வைக்கப்பட்ட பூக்களை எடைபோடும் பணியைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தார், சத்தியநாதன். அவரிடம் நம்மை அறிமுகப் படுத்திக்கொண்டதும், மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick