கலகல ‘காந்தி’ கடலை... மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்! | Profitable Groundnut yield near Thanjavur by organci farming - Pasumai Vikatan | பசுமை விகடன்

கலகல ‘காந்தி’ கடலை... மதிப்புக் கூட்டினால் கூடுதல் லாபம்!

மகசூல்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

ற்சார்பு விவசாயம், கூடுதல் லாபம், நிலையான விற்பனை வாய்ப்பு... போன்ற நன்மைகள் இருப்பதால் விவசாயிகள் பலர், இயற்கைமுறை வேளாண்மைக்கு மாறி வருகிறார்கள். இந்நிலையில் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பை நேரடியாக உணர்ந்து இயற்கை விவசாயத்துக்கு மாறியவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ்.

திருக்காட்டுப்பள்ளிக்கு அருகே உள்ள கிராமமான  ‘நாகாச்சி’யில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார் ரமேஷ். ஒரு பகல்பொழுதில் அவரைச் சந்தித்தோம். “நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். காலேஜ் முடிச்சுட்டுத் தனியார் நிறுவனத்துல வேலை செஞ்சுட்டு இருந்தேன். அந்தச் சமயத்துல அப்பாவுக்குக் கேன்சர் வந்து, ஆஸ்பத்திரியில் வெச்சு பார்க்க வேண்டிய நிலை வந்துடுச்சு. அப்பாகூடத் துணைக்கு இருந்தப்பதான் எதேச்சையா ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிச்சேன். அதுல நம்மாழ்வார் ஐயா பத்தித் தெரிஞ்சுகிட்டேன். அவரோட சொந்த ஊரான இளங்காடு, எங்க ஊர்ல இருந்து நாலு கிலோமீட்டர் தூரத்துலதான் இருக்கு. ஆனா, நான் அவரைப்பத்தி பசுமை விகடன் மூலமாதான் தெரிஞ்சுகிட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick