குதிரைவாலி... விதைப்பு, அறுவடை மட்டுமே... ஆடிட்டரின் அசத்தல் விவசாயம்!

மகசூல்இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ கோ.நம்மாழ்வார், தான் கலந்துகொண்ட பல கூட்டங்களில், “தமிழகத்தில் இயற்கை வேளாண்மையை ‘பசுமை விகடனுக்கு முன்’, ‘பசுமை விகடனுக்குப் பின்’ என இரண்டாகப் பிரிக்கலாம். பசுமை விகடனுக்கு முன், ரசாயன முறை விவசாயம் செய்தவர்கள்தான் இயற்கை விவசாயத்துக்கு மாறி வந்தனர்.

பசுமை விகடனுக்குப் பின், விவசாயத்துக்குச் சம்பந்தமே இல்லாதவர்கள் பலரும், அந்தப் புத்தகத்தைப் படித்ததால், இயற்கை மீது ஆர்வம் ஏற்பட்டு, இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பித்துள்ளனர்” என்று பசுமை விகடன் இதழ் குறித்துப் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தளவுக்குப் பலரையும் இயற்கை விவசாயத்துக்கு அழைத்து வந்ததில் பசுமை விகடனுக்குப் பெரும் பங்கு உண்டு. இப்படிப் பசுமை விகடன் இதழைப் படித்து, விவசாயத்துக்கு வந்தவர்களில் ஒருவர் ‘ஆடிட்டர்’ அருளானந்தம்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி - சாத்தூர் சாலையில் உள்ள சுப்பிரமணியபுரம் எனும் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார் அருளானந்தம். ஒரு மாலை வேளையில் தோட்டத்தில் இருந்த அருளானந்தத்தைச் சந்தித்துப் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick