மானாவாரியில் விளைந்த வரகு! - பள்ளி ஆசிரியரின் இயற்கைச் சாகுபடி!

மகசூல்எம்.திலீபன்

நாகரிகம் என்ற பெயரில், மேலை நாட்டுப் பழக்கவழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கியதால், நம் பாரம்பர்ய சிறுதானிய உணவுகள் ஒதுக்கப்பட்டுவிட்டன. இதனால், பட்டை தீட்டப்பட்ட அரிசி உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் என்று மாறிவிட்டது நம் உணவு கலாசாரம். தேவையின் அடிப்படையில்தான் உற்பத்தி இருக்கும் என்பதால், விவசாயிகள் பலரும் பாரம்பர்யமாக மேற்கொண்டு வந்த சிறுதானியங்கள், நெல் ரகங்கள் போன்றவற்றைக் கைவிட்டு, வீரிய ரக நெல் வகைகள், பயிர்கள் எனச் சாகுபடி செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆனாலும் பல இயற்கை விவசாயிகள் இன்னமும் சிறுதானியங்கள், பாரம்பர்ய நெல் வகைகள் எனச் சாகுபடி செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன்.

அரியலூரில் வசித்துவரும் ரவிச்சந்திரன், கடு.பொய்யூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணி புரிந்துகொண்டே விவசாயமும் செய்து வருகிறார். அரியலூர்- கள்ளக்குறிச்சி சாலையில் எட்டாவது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஆனந்தவாடி பஞ்சாயத்தில்தான் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான நிலம் உள்ளது.

ஒரு விடுமுறை நாளில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த ரவிச்சந்திரனைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick