கொட்டிக் கொடுக்கும் கருத்தக்கார்... மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்! | The Sustainable Rice Cultivation - Pasumai Vikatan | பசுமை விகடன்

கொட்டிக் கொடுக்கும் கருத்தக்கார்... மதிப்புக் கூட்டினால் மகத்தான லாபம்!

மகசூல்சுபீஷ், படங்கள்: எல்.ராஜேந்திரன்

“விவசாயம் செய்யணும்னு ஆசைப்பட்டுக் கையைச் சுட்டுக்கிட்ட நிலைமையில, எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி விவசாயத்துல ஜெயிக்க வெச்சது ‘பசுமை விகடன்’தான்” என்று சிலாகித்துச் சொல்கிறார் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கணபதி.

திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி-டோனாவூர் செல்லும் சாலையில் ஏர்வாடியிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புளியக்குறிச்சி கிராமத்தில், கணபதியின் நெல்வயல் இருக்கிறது. வயலில் வேலை செய்துகொண்டிருந்த கணபதியைச் சந்தித்தோம். “அப்பா ஏர்வாடியில் வாடகைப் பாத்திரக்கடை வெச்சுருந்தாங்க. நான் பன்னிரண்டாம் வகுப்பு முடிச்சுட்டு அப்பாகூடச் சேர்ந்து பாத்திரக்கடையைப் பார்த்துக்க ஆரம்பிச்சேன். வியாபாரம்மூலமா பல விவசாயிகளோட பழக்கம் ஏற்பட்டு, எனக்கும் விவசாயம் செய்யணும்னு ஆசை வந்துடுச்சு. அதனால, 2002-ம் வருஷம் இந்த 10 ஏக்கர் நிலத்தை வாங்கினேன். அதுல 2 ஏக்கர் நிலத்துல வாழையையும் 3 ஏக்கர் நிலத்துல அம்பை 16-ங்கற நெல்லையும் சாகுபடி செஞ்சேன். அக்கம் பக்கத்து விவசாயிகள்கிட்ட ஆலோசனை கேட்டு ரசாயன உரம், பூச்சிக்கொல்லி கொடுத்துத்தான் விவசாயம் செஞ்சேன். மகசூலை அதிகரிக்கிறதுக்காக ஒவ்வொரு வருஷமும் பூச்சிக்கொல்லியையும் ரசாயன உரத்தையும் அதிகரிச்சுட்டே போக வேண்டியிருந்துச்சு. ஆனாலும், விடாம 2011-ம் வருஷம் வரைக்கும் விவசாயம் செஞ்சுட்டுத்தான் இருந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick