தண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தண்ணீர்’பொறிஞர்’ அ.வீரப்பன் - தொகுப்பு: த.ஜெயகுமார் - படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், சி.ரவிக்குமார்

மிழக நீர்வளங்களின் முக்கியத்துவமும், அவற்றின் அழிவும், மீட்டுருவாக்கமும், அதைச் சார்ந்த அரசியல் பிரச்னைகளைப் பற்றியும் பேச இருக்கிறது இத்தொடர். நீர்வளங்களைப் பாதுகாக்கவும் அதை மீட்டெடுக்கவும் தூண்டுகோலாக இந்தப் பகுதி அமையும்.

‘மக்களுக்கான சேவைகள்’ என்று சொல்லிக்கொள்ளும் கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள், சாலைகள், தொழிற்சாலைகள்... போன்றவற்றில் பெரும்பான்மையானவை ஏதாவதொரு நீர் நிலையின் மீதுதான் அமைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் மக்களுக்குத் தேவைதான் என்றாலும் மக்களுக்கான அடிப்படைத்தேவை தண்ணீர்தான் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

தமிழ்நாட்டின் மொத்த மக்கள்தொகை 7.91 கோடி. தமிழ்நாட்டின் நிலப்பரப்பு 1,30,266 சதுர கிலோமீட்டர். இதில் பாசனப் பரப்பளவு 20 லட்சம் ஏக்கர் (8,33,583 ஹெக்டேர்). உலக அளவில் பாசன முறையை முன்னெடுத்தவர்களில் முன்னோடியானவர்கள் தமிழர்கள். இப்போது, தண்ணீர்ப் பற்றாக்குறையால் அல்லாடிக் கொண்டிருப்பவர்களும் தமிழர்கள்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்